Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

மதுரை

மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நரசிம்மம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, அபிலான்குடி சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துப்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தங்குளம், ரைஸ் மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரக்குண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை இலங்கிப்பட்டி காயம்பட்டி,

வேப்படப்பு , பூஞ்சுத்தி , சுண்ணாம்பூர் , ஆமூர் , இடையபட்டி, எட்டி மங்கலம் , மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாப்பட்டி, ஆலம்பட்டி, சேக்கி பட்டி, ஆ. வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி, சாணிபட்டி, புலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என மின்வாரிய கிழக்கு செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

மானாமதுரை யூனியன் உட்பட்ட திருப்புவனம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, திருப்புவனம், தி. புதூா், லாடனேந்தல், பாப்பாங்குளம், திருப்பாச்சேத்தி, மழவரானேந்தல், மாா்நாடு, பழையனூா், அழகுடையான், ஆனைக்குளம், சங்கங்குளம், அச்சங்குளம், கீழராங்கியம், அல்லிநகரம், கலியாந்தூா், பொட்டப்பாளையம், கீழடி, மணலூா், தட்டான்குளம், கழுகோகடை, பூவந்தி, மடப்புரம், வடகரை, முதுவன்திடல், குருந்தங்குளம், மேலச்சொரிக்குளம், வயல்சேரி, சிவனாங்குளம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருப்பூர்

உடுமலை அடுத்துள்ள கிளுவன் காட்டூர் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட கிளுவன் காட்டூர், இளையமுத்தூர், பெரிசனம் பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு , மானுப்பட்டி, குமரலிங்கம், அமராவதி நகர். கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |