Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விபரம்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வெள்ளாங்கோவில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை வெள்ளாங்கோவில், எல்லமேடு, வேலம்பாளையம், நீலக்கவுண்டம்பாளையம், சத்தியாபுரம், நிச்சாம்பாளையம், வாய்க்கால்புதூர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அதேபோல கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் தொட்டம்பட்டி, அல்அமீன் நகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மின் விநியோகம் இருக்காது.

Categories

Tech |