தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை மாவட்டம்:-
சென்னை மதுரவாயல் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம்:-
ராஜபாளையம் நகரப் பகுதியில் முடங்கிய ரோடு, சின்ன சுரைக்காய்பட்டி, பெரிய சுரைக்காய்பட்டி, பெரியகடை பஜார், சம்பந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் :-
மார்த்தாண்டத்தை அடுத்த பயணம் பகுதியில் இன்று (மார்ச்.2) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் உண்ணாமலைக்கடை, புன்னை காடு, பயணம், ஆயிரம்தெங்கு, பெரும்புளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மார்ச்.2) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் விநியோக பிரிவுக்கு உட்பட்ட சாந்தபுரம் உயர் அழுத்த மின் பாதையில் நாளை (மார்ச்.3) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை (மார்ச்.3) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பாம்பன்விளை, ஆசாரிபள்ளம், மேலசங்கரன்குழி, தோப்பூர், சாந்தபுரம், பேயோடு, சரல், சூரப்பள்ளம், அரசன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
தர்மபுரி மாவட்டம்:-
பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 05.03.2022 (சனிகிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, மெணசி, H. புதுப்பட்டி, காளிப்பேட்டை, எருமியாம்பட்டி, அதிகாரப்பட்டி, மஞ்சவாடி, அ.பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, கவுண்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.