Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்..17) முதல் 3 நாட்கள்…. டாஸ்மாக் கடைகள் மூடல்…. கவலையில் மதுபிரியர்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் அதிவேகமாக பரவி வந்த கொரோனா 3-வது அலை குறைந்ததை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது டாஸ்மாக் கடைகளும் வழக்கமான நேரத்தில் செயல்பட தொடங்கியுள்ளன. இதனிடையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக மீண்டும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியது.

அதாவது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெற இருக்கிறது. அந்த அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக பிப்ரவரி 19ம் தேதியன்று பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று (பிப்.17) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள், அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில், பிப்.17 (இன்று) காலை 10 மணி முதல் பிப்.19 நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான பிப்.22 அன்று அனைத்து மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகளையும் மூடுவதற்கு  உத்தரவிடபட்டுள்ளது.

Categories

Tech |