Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கடைசி இல்லை…. இன்னும் 1 வாரம் டைம் இருக்கு…. பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகஅரசு மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். LKG முதல் ஒன்றாம் வகுப்புக்கான இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 1.30 லட்சம் இடங்கள் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்தத் திட்டத்தில் 1.12 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் rte. tnschools.gov.in என்ற அரசு வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு விண்ணப்பிக்க மே 18-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில்   மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம், வருகின்ற 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திருப்பதாக தற்போது வெளியிட்டுள்ளது.

Categories

Tech |