தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் பகுதி : சிட்கோ; ஈ.பி.ரோடு, கண்ணன் கோவில் தெரு, பிராமின் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, குளக்கரை தெரு.
பெரம்பூர் பகுதி : சிட்கோ ; அகத்தியர் நகர், எம்.டி.எச் சாலை, குமாரசாமி நகர், பொன்விழா நகர், சிவசக்தி காலனி, அன்னை சத்யா நகர்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம்:
மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சில பகுதிகளில் 23-ந் தேதி மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் விரிகோடு, மாமூட்டுக்கடை, நெட்டி யான்விளை, காட்டவிளை, மஞ்சக்குளம், கரைக்காடு, பரக்குன்று, சாத்தன்கோடு, துவரச்சன்விளை,
வாழ்வச்சான்பாறை, மூடோடு, சாண்டிபாறை, செழுவன்சேரி, தூப்புர மூலை, மணப்பழஞ்சி, நுள்ளிக்காடு, அயக் கோட்டிவிளை, மடத்து விளை, மாங்கோடு, காளை விழுந்தான்கோயில், ஐந்துளி, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி உள்ளிட்ட பகுதிகளுக்கு 23-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.