தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூன் 11) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆறுமுகநேரி மற்றும் நாசரேத் பகுதிகளில் மழைகாலங்களில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் உள்ள பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், ஆலந்தலை மெயின்ரோடு, சுனாமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், சுனாமி நகர், அண்ணா நகர், பிலோமி நகர், அடைக்கலாபுரம் – ஆறுமுகநேரி ரோடு, நைனார்பத்து, சீர்காட்சி, முதலூர் ஏபி நகர், கருவேலம்பாடு, வீராக்குளம், மடத்துவிளை, பிரண்டார்குளம், உடன்குடி, கடாச்சபுரம், அன்பின்நகரம், மெய்யூர், வெங்கட்ராமானுஜபுரம், செட்டிவிளை, பெரியதாழை, தோப்புவிளை, இடைச்சிவிளை ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் உப்பளம் சார்ந்த பகுதிகளில் உயர் மின் அழுத்த பாதையில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டு இருக்கும் பட்டங்களை அகற்றும் பணி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது இதனால் தருவைகுளம் உப்பளம் சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதே போன்று தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடக்கிறது. இதனால் காற்றுத்திறப்பான் மாற்றி அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. ஆகையால் போல்டன்புரம், கோர்ட்டு, திருச்செந்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் தனலட்சுமி தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்:
கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வீரசோழன் வழித்தடத்தில் மின் விநியோகம் பெறும், சின்னஉடப்பங்குளம், பெரியஉடப்பங்குளம், மண்டலமாணிக்கம், வலையபூக்குளம், எழுவணூா், காக்குடி, போத்தநதி, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 11 தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.