Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 5) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. எங்கெல்லாம்…? இதோ மொத்த லிஸ்ட்…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்ற (05-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம்:

குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- குழித்துறை துணை மின் நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங் கோடு, கோட்ட விளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக் கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித் துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச்சார்ந்த துணை கிராமங்களுக்கும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இந்த நேரத்தில் மின்பாதைகளில் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடை யூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம்:

திருப்பத்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம்:

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஆதலால் பி. எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், ஐ.என்.டி.யு.சி. நகர், பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்ட மலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், லட்சுமிபுரம், ராம்கோ நகர், நத்தம் பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Categories

Tech |