Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்..26) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்……!!!!

மதுரை

கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரண மாக இன்று மின்தடை மேற்கொள்ளப்படும் கொட்டாம்பட்டி, சின்ன கொட்டாம்பட்டி, பொட்டபட்டி, வெள்ளிமலை, முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுபட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி.நகர், விஸ்வநாதபுரம், சி.இ.ஓ.ஏ பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலா நகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில் பாப்பாகுடி, கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

திண்டுக்கல்

அய்யலூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அய்யலூர், குருந்தம்பட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி, தங்கம்மாபட்டி, மாமரத்துப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கீழவல்லநாடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு மையம், திருவேங்கடநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.

கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை ) நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , வழுக்கம்பாறை , கீழமணக்குடி , அழகப்பபுரம் , சுசீந்திரம் , சின்னமுட்டம் , கொட்டாரம் , சாமித்தோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக்கோட்டு பொத்தை , வாரியூர் , அகஸ்தீஸ்வரம் , மருங்கூர் , தேரூர் , தென்தாமரைகுளம் , ஊட்டுவாள்மடம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சத்திரப்பட்டி அடுத்த ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமிபுரம், சங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர் கோட்டை, உப்பு பட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாசலபுரம், மேலாண்மறை நாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, மாதவராயன்பட்டி

கோயம்புத்தூர் மெட்ரோ:

காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Categories

Tech |