Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 60 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கும்,விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடப்பு நிதி ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் இன்னும் 60 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,220மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |