தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 4-வது குருதிசார் ஆய்வு முடிவுகளின்படி 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 90% நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இனி தமிழகத்திற்கு மட்டும் ஊரடங்கு வராது என்ற நிலை ஏற்பட்டுள்ளது..
Categories
தமிழகத்தில் இனி ஊரடங்கு கிடையாது?…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!!
