தமிழகத்தில் இனி இரட்டை தலைமைதான் தொடரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. தற்போது அதிமுக ஆட்சி முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. அதே நிலைமை தொடர வேண்டும் என கட்சித் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது அப்போது தான் தெரியவரும். இந்நிலையில் இரட்டை தலைமை என்பது அதிமுகவினருக்கு பழகி விட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இரட்டை தலைமை எங்களுக்கு பழகிப் போய்விட்டது. இரட்டை தலைமை என்பது எங்களுக்கு கூடுதல் பலம் தான். கட்சி மற்றும் ஆட்சி தற்போது எப்படி நடைபெற்றதோ அதே நிலைதான் மீண்டும் தொடரும் என அவர் கூறியுள்ளார்.