Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 8 தொகுதிகளில் தாமரை மலர போகிறது…. பாஜக போட்ட புதிய திட்டம்….!!!!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்தும் பாஜக ஆலோசனை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் இருக்கும் மாநிலங்களுக்கு பாஜக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மாநிலங்களில் கட்சி ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கோரி தேர்தல்களில் வெற்றி பெற வியூகங்களை அமைக்குமாறு பொறுப்பாளர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து தாமரை மலரவே மலராது எனக் கூறப்பட்டு வந்த தமிழ்நாட்டில் 4 பேர் எம்எல்ஏக்கள் ஆகும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை பாஜக புத்துணர்ச்சியை அளித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து சில எம்பிக்களை பெற்று விட வேண்டும் என்பதில் பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக விரிவான ஆய்வு நடத்தி கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, சிவகங்கை, கரூர், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 8 தொகுதியை பாஜக குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 8 தொகுதிகளில் வட இந்திய தேர்தல் ஃபார்முலாவே பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எட்டு தொகுதிகளிலும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து படையெடுத்து மக்கள் மத்தியில் மத்திய அரசின் சாதனை விளக்க உள்ளனர். இந்த பார்முலா ஏறக்குறைய திண்ணை பிரச்சாரத்தை போல தான் இருக்கும். அதன்படி ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக மூத்த தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு அப்பகுதியை பாஜக ஆதரவு நிலைப்பாட்டு கொண்டு வருவது தான் இவர்களின் இலக்கு. மேலும் பாஜகவின் இந்த திட்டம் ஓரளவுக்கு கைகொடுக்கும் என்று டெல்லி மேலிடத்தில் கருதுவதால் அதை நிறைவேற்றி காட்டிட வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |