Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறும்…. கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் பிரபல போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பல மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலகப் புகழ்பெற்றது. இந்த போட்டியை பார்ப்பதற்காக  வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த மனுதாரர் தரப்பில் கூறியதாவது, “ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுதுபோக்கல்ல. தன்னுடைய காளை மாடுகளை காட்சிப்படுத்த விரும்புபவர்கள் நடத்தும் விளையாட்டு.

இந்த விளையாட்டை முற்றிலும் பொழுதுபோக்கு என்ற அடிப்படையில் கூற முடியாது. மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் விவசாயிகளால் ஆண்டு முழுவதும் பராமரிக்கப்படுகிறது. எனவே இது கலாச்சாரம் மதிப்பீடுகளைக் கொண்டிருக்க முடியாது” என கூறினார். இதனை தொடர்ந்து மாநில அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர்  ஜெனரல் துஷார் மோதோ கூறியதாவது. “இந்த சட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும்,  பாரம்பரியமிக்க நிகழ்வாக இந்த போட்டி  இருந்து வருவதாகவும்” கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். ஆனால் கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கால்நடை பராமரிப்புத்  துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |