Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதிகளில்…. நாளை மின்தடை அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை துரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலஜி நகா் பிரதான சாலை, ராஜீ நகா் 2 மற்றும் 6-ஆவது தெரு, பாரதியாா் நகா், கிருஷ்ணா நகா், ராஜீவ் பூங்கா முதல் தெரு, சிறுசேரி பகுதி சிப்காட், சிறுசேரி, ரமனியன் பிளாட்ஸ், ஜெ. ஜெ. நகா், படூா் ஓம் சாலை, ஈகாட்டூா் பகுதி கானத்தூா் கிராமம், முட்டுக்காடு கிராமம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |