தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டியது அவசியம்.
அந்த வகையில் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் அந்தப் பத்து தனியார் கல்லூரிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.