தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கபிலர்மலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ். கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி ராசிங்காபுரத்தை சுற்றி உள்ள கிராமங்களான ராசிங்கபுரம், சிலமலை, டி ஆர் புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சுப்புலாபுரம்,பொட்டிபுரம், சில்லமரத்துப்பட்டி, மல்லிகாபுரம், திம்மி நாயக்கன்பட்டி, சின்னபுத்திபுரம், சுந்தரராஜபுரம், தர்மத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாளை காலை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் ராசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்:
விஜயாபுரி உப மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகின்ற சால் நாயக்கன்பட்டி மின் தொடர்புக்கு மேல் குறுக்காக புதிதாக 400 கிலோவோட் மின் தொடர் அமைக்க இருப்பதால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படுகின்ற கோவில்பட்டி ஊரக விநியோகப் பிரிவிற்கு உட்பட்ட குருவிநத்தம், கொப்பம்பட்டி, வேப்பன்குளம், தீத்தாம் பட்டி, இலந்தைப் பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம்:
பேராவூரணி துணைமின் நிலையத்தில்மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பேராவூரணி, காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லி-பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வாகொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது..
புதுச்சேரி:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பாரதிவீதி (நீடராஜப்பையர் வீதிக்கும் சவரிராயலு வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), மகாத்மா காந்தி வீதி (நீடராஜப்பையர் வீதிக்கும் சின்ன வாய்க்கால் வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), சவரிராயலு வீதி (பாரதி வீதிக்கும் மகாத்மா காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), செயிண்ட் தெரசா வீதி (சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும் மகாத்மா காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி) குளத்து மேட்டு வீதி முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது.