Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் என்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், இதனால் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |