ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடைசெய்வது குறித்து தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதி இருந்த நிலையில், சட்டத்துறை வாயிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சென்ற அக்..19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்வது குறித்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்டமசோதா ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அவற்றில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது பற்றிய அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறதா எனவும் இதற்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைசட்டத்துக்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் ஆளுநர் எழுப்பி இருக்கிறார்.
இது பற்றியே சட்டத் துறை உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளது. தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.