தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மதுபானங்கள் விற்பது பற்றி அரசுசுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கூட்டம் தயக்கமாக இருக்கும் கடைகளில் 2 கவுண்டர்கள் அமைத்து மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.