Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் பணி நிரந்தரம்?….!!!!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களை பணி நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்நிலையில் பிரதிநிதிகள் சிலரை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேற்று தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பேசியுள்ளார்.அவர்களில் சிலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்ததாக கூறப்படுகிறது. அவர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை பரிசீலிப்பதற்கு கூட தமிழ்நாடு அரசு தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி போன்ற பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012 அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்து 549 பகுதி நேர பணி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் வாரத்திற்கு 3 அரை  நாட்கள் மட்டுமே பணியாற்றினால்  போதுமானது. அதிகபட்சமாக நான்கு பள்ளிகளில் பணியாற்றும் போது  ஒரு பள்ளிக்கு ரூபாய் ஐந்தாயிரம் வீதம் நான்கு பள்ளிகளுக்கு ரூபாய் 20,000 ஊதியம் ஈட்ட முடியும் என அரசு அறிவித்ததால் அவர்கள் இப்பணியில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பாட்டாளி மக்களின் கட்சி வலியுறுத்தலை  அடுத்து அவர்கள் ஊதியம் 2014ஆம் ஆண்டு 7 ஆயிரம் ரூபாயாகவும்,அதன்  பின்னர் 7,700 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என கடந்த 2014ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்த போதிலும் அது அறிவிப்பாகவே நின்றுவிட்டது வேதனை அளித்துள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு நினைத்தால் அவர்களை பணி நிலைப்பு செய்து காலமுறை ஊதியம் வழங்க ஆயிரம் வழிகள் உள்ளன. 2025 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில்,‘‘பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம்  செய்யப்படுவார்கள்’’ என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றும் வகையிலும் பகுதிநேர ஆசிரியர்களின் துயரங்களைப் போக்கும் வகையிலும் அவர்களை பணிகளை செய்வதற்கான ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |