சேலம் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களில் ஒருவர் தியாகி தீரன் சின்னமலை. இவர் ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இளம் வயதிலேயே போர்க்கலைகளான வால் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், வில்யுத்தம் போன்ற கலைகளில் ஆர்வம் காட்டினார். மேலும் நமது நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்துவது துளியும் பிடிக்காத இவர் அவர்களை எதிர்த்து போராடத் தொடங்கினார். பல போராட்டங்களில் ஈடுபட்டு ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார்.
மேலும் அரச்சலூர் ஆகிய இடங்களிலும் நடைபெற்ற போர்களில் ஆங்கிலேயரை வெற்றி பெற்ற பிறகு பிரிட்டிஷ் அரசால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார். இவரின் நினைவு நாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகின்றது. அத்துடன் அன்றைய தினம் ஆடிப்பெருக்கு விழாவும் நடைபெற உள்ளதால் பொது மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களும் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி 14 அறிவிக்கப்பட்டுள்ளது.