தமிழகத்தில் ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை, சிலிண்டர் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி ஆகியவற்றால் தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முழுமையாக நடைமுறைக்கு வரும்போது அரிசி விலை மேலும் அதிகரிக்கும்.
மேலும் ரஷ்ய உக்கிரன் போரால் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன்படி பழைய பொன்னி கிலோ 3 உயர்ந்து 46 முதல் 50 ரூபாய்க்கும், புதிய பொன்னி 46 முதல் 50 ரூபாய் வரையும் அதிகரித்த்துள்ளது.