சென்னையில் அதி நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 34.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதன் அறுவை சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த மையத்தில் கடினமான அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லியமாக போராடி கருவிகள் உதவியுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்யமுடிகிறது. இந்த அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் 120 டிகிரி மட்டுமே சுழன்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
ரோபோட்டிக் சிகிச்சையினால் உள்ள ‘என்டோ ரிஸ்ட்’ வழியே 360 டிகிரி வரை சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது. இதில் 3டி விரிவாக்கம் உள்ளதால் மிக எளிதில் நாளங்களின் அமைப்புகளை கண்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும். சிறுநீரக அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு இந்த அதி நவீன இயந்திரம் பயன்படும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம்தென்னரசு, சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.