Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வந்தனர். இதனையடுத்து அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றனர். இந்த கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அரசு மக்கள் நலனில் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன் விளைவாக கடந்த வருடம் முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசுப் பள்ளிகளை சேர்ந்தாள பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனை தற்போது தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக கட்டிடங்களை சீரமைக்க 5 வருடத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி மூலம் 15,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக இந்த வருடம் 1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |