தமிழகத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான வார்டன் காலிப் பணியிடங்களும், ஆயிரக்கணக்கான சமையலர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே மொத்தம் 1384 ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் இருக்கிறது. இதனால் உடனே இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் காலியாகவுள்ள வார்டன் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளிலுள்ள அனைத்து குறைகளும் ஒருமாத காலத்திற்குள் கண்டிப்பாக தீர்த்துவைக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்து இருந்தார். அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதனிடையே ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி சமையலர் தேர்விற்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் சமையலர் தேர்வு எழுதியவர்கள் பணிஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இச்சூழ்நிலையில் விடுதி சமையலர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்வதற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வுக் குழுவின் முக்கிய பணி உரிய நபர்களை தேர்வு செய்வதுதான் என்றும் உயர்நிதிமன்றகிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.