163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1,20,000 இடங்களில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியலை அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டதட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர், இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்களாக கருதி, அவர்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.