Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. இன்று பொது விடுமுறை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் 17ஆம் தேதி திங்கட்கிழமையான இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 4ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஜன.17ம் தேதி மட்டும் வேலைநாளாக இருந்தது வெளியூர் சென்று வேலை வேலை பார்ப்பவர்களுக்கு மனவருத்தத்தை அளிக்கும் விதமாக அமைந்தது.

அதனால் அரசு ஊழியர்கள் ஜனவரி 17ம் தேதி விடுமுறை அளிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு தமிழகம் முழுவதும் வரும் 17ம் தேதி திங்கள் கிழமை அதாவது இன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. அதாவது ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும், ஜன.18ம் தேதி தைப்பூச விழா அரசு விடுமுறை என்பதாலும், இடைப்பட்ட நாளான ஜன.17 அன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |