தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரையின்படி அனைத்து மாணவராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவு உள்ளது. மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்திய நிலையில் அப்போது வழங்கிய ரசீதில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.
இதனால் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு மோகன் புகார் அளிப்பினார். இது குறித்து தமிழக முழுவதும் இந்த ரசீது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டதை தமிழ் வளர்ச்சி துறை உறுதி செய்தது. இந்நிலையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மண்டல இயக்குனர்கள் அனைத்து ரசீதுகளிலும் தகவல்களை தமிழில் அச்சீட்டு வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இனி அரசு அலுவலகங்களில் வழங்கப்படும் அனைத்து ரசீதுகளும் தமிழில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.