தமிழகத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழில் தேர்வு எழுதி 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தேர்வுகள் எழுத முடியும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பளித்துள்ளனர். தமிழக பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்வியில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு பணியில் சேருபவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இதுவரை தமிழ் தெரியாத தமிழக இளைஞர்கள் நிச்சயம் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.