தமிழகத்தில் மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் டிரிப்பர் கருவியை பொருத்துவது கட்டாயம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின் பழுது, மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆர்சிடி என்ற உயிர்காக்கும் சாதனத்தை அனைத்து வகையான நுகர்வோரும் மின்இணைப்பில் பொருத்துவது கட்டாயம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை, வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் டிரிப்பர் கருவியை பொருத்த வேண்டும்,
நடப்பு மழைக்காலத்தில் அதிகரித்து வரும் மின் விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய மின்நுகர்வோர் மட்டுமல்லாது தற்போதுள்ள நுகர்வோரும் இந்த கருவியை பொருத்துமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.