Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  தரமான பொருட்களை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகின்ற பொருள்களை கொண்டு, தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும், அந்தந்த குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரசின் சார்பில் மளிகை பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதையடுத்து வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பல லட்சக்கணக்கான மக்கள், இதன் மூலம் மிகவும் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக தமிழக அரசுக்கு மக்களின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட பொதுவிநியோகத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து அண்மை காலமாக  நிர்வாகம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ரேஷன் கடைகளில் அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் அனைத்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் பங்கு பெற்று, ரேஷன் கடை ஊழியர்களின்  செயல்பாடுகளை குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு முதலில் பொருட்களை வழங்க வேண்டும்.

மேலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கண்டிப்பாக பொருள்களை வழங்க வேண்டும் எனவும் இல்லை என்று  கூறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் கெட்டுப் போன பொருட்களை வழங்கக்கூடாது. இவ்வாறு அந்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

Categories

Tech |