தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கிண்டி ஐஐடியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார.
மேலும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது என்று வந்த தகவல் பொய்யான தகவல் என்று அவர் கூறினார். இதையடுத்து தனியார் நிறுவனங்களில் நிலக்கரி தட்டுபாடு ஏற்பட்டதால் 50% மின் வினியோகத்தை குறைத்து விட்டது. ஆனால் அரசு அனல் மின் நிலையங்களில் கூடுதல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.