தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்றும் பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. மழையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க 5093 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.