தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் பருவம் தவறி மழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் அனைத்தும் அழிந்து நாசமாகின. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டம் இன்றி தெளிவாகக் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.