அசானி புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம்,புதுச்சேரியில் மே 15ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
