தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.என் நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி,சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை 8 மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும். வருகின்ற 31ஆம் தேதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது .சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.