தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் தினசரி தொற்று எண்ணிக்கை 23,000-த்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,459 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதல்வர் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகரத்தில் இருந்து பெருவாரியான மக்கள் கிராமங்களுக்கு சென்றுள்ளார். எனவே வரும் வாரங்களில் கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று தகவல் வந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும், அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.