Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 24ஆம் தேதி வரை கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |