தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நவம்பர் பத்து மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தின் அநேக இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது m