தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அடுத்த மாதம் வழங்கக்கூடிய ரேஷன் பொருள்களை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு பாமாயில் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஒரு மாதம் வாங்க வில்லை என்றால் அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படமாட்டாது.
இதையடுத்து அடுத்த மாதம் 4-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதனால் இந்த மாத இறுதியில் இருந்து பல்வேறு மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்ற நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பொருள்களை வாங்க இயலாத நிலை ஏற்படும். தற்போது மளிகைப் பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ரேஷனில் அடுத்த மாதம் வழங்கக் கூடிய உணவுப் பொருட்களை இந்த மாதம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலர் நசிமுதீன் அறிவிப்பில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மத்திய,மாநில அரசு அலுவலர்களும் ஆண்டு வருமானம் லட்ச ரூபாய்க்கு மேல் பெறுபவர்களுக்கும், ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், 3 அறைகள் உள்ள கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்களுக்கும், ரேஷன் அரிசி வழங்கப்படாது என்று பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. பொதுவிநியோகத் திட்ட பலன்கள் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. அரிசி கார்டுதாரர்கள் இலவச அரிசி மற்றும் மானிய விலை பொருட்களை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் அது உண்மைக்கு புறம்பானவை என்று அவர் கூறியுள்ளார்.