தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு அதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வெளியில் செல்லும் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன .
இந்நிலையில் திருவண்ணாமலை அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.