எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 78 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 21 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.