பொதுவாக அரசுத்தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆந்திராவில் குரூப்-1 உட்பட அனைத்து அரசு பணிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்று நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது எனவும் புதிய அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இதை வரவேற்ற அன்புமணி ராமதாஸ் வெளிப்படைத்தன்மைக்காகவும், முறைகேடுகளைத் தடுப்பதற்காகவும் மாநில அரசு பணிகளுக்கு நேர்காணல்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எழுத்து தேர்வின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.