தமிழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு கடந்து சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,771 பிஎஸ் -4 ரக பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து கழகம் மண்டலத்திற்கு பிரித்து வழங்கப்படும்.
அதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 115 பேருந்துகளும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும், திருநெல்வேலி மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளன