இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய அரசின் திட்டமிடலில் அக்கறையில்லாத காரணமாக மாநிலங்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் கட்டமைப்பு உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு போதுமான தடுப்பூசியை ஒதுக்கவில்லை என்றும்,தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசியை குறித்து அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.