நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 80%, 90 மாவட்டங்களில் இருந்து மட்டுமே கண்டறியப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் நாட்டில் 24 சதவீதம் மக்கள் முக கவசம் அணிவதே இல்லை. 45 பேர் முறையாக முக கவசம் அணிவது இல்லை. 63 சதவீதம் பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.