Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மூலதன செலவினங்களுக்காக… “மத்திய அரசு ரூ.3500 கோடி வட்டி இல்லா கடன்”… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!!!!!

தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த கூட்டத்திற்கான அமைச்சர்கள் குழு அறிக்கை தயாராகவில்லை அதனால் தான் கூட்டம் நடத்துவதற்கு தாமதம். இந்த சூழலில் தமிழகத்தின் திட்டங்கள் நிதி ஒதுக்கீடு விவகாரங்கள் பற்றி பல்வேறு மத்திய அரசு நிர்வாக அதிகாரிகளிடம் சில நாட்களாக நேரில் சந்தித்து விவாதம் மேற்கொண்டு வருகின்றோம். இதன்பின் இறுதியாக மத்திய நிதி அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு ஏஜென்சி நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய கடனுக்கான ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுக்கப்படாமல் இருக்கிறது தற்போது மாநில அரசு தனது முதலீடுகளை செய்யும் பணிகளை தொடங்கி இருக்கிறது.

மேலும் இந்த விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமிடமும் கூறப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிகழ் மாதத்திற்குள் இந்த கடனை விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருக்கிறார். கடந்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் மூலதன முதலீடாக ஒரு லட்சம் 50 கோடி வருடங்களுக்கு வடியிலா கடனாக அளிக்கப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிதி உதவிக்கு தமிழக அரசு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த சூழலில் இதில் 3500 கோடி வட்டி இல்லா கடனை தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை விடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த கடன் திட்டத்தில் கிராம சாலைகள் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டம் மின்னனு பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் போன்றவற்றிற்கான மூலதன மின்னனு செலவுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் கண்ணாடி இழை கேபிள் திட்டத்திற்கு 184 கோடி மற்றும் ஊரக நெடுஞ்சாலை திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இந்த 3500 கோடி பயன்படுத்தப்படுகிறது. மேலும் வருமான வரி பணியாளர் வருங்கால வைப்பு நிதி போன்ற தரவுகள் மத்திய அரசிடம் கூறப்பட்டிருக்கிறது. இந்த தரவுகள் கிடைத்தால் தமிழக அரசு கடன் தள்ளுபடி உரிமை தொகை போன்ற பல திட்டங்களுக்கு முறையாக நிதிய ஒதுக்க பயன்படும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஏற்கனவே தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது. இது முறையாக மத்திய அரசிடம் இருந்து கிடைத்தால் வருமான வரி செலுத்துவோர் வறுமை கோட்டிற்கு கீழே இருப்போர் குறித்த விபரங்களை அறிய உதவும்.

மேலும் இந்த தரவுகளை வழங்குவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது பல வருடங்களுக்கு முன்பு நெப்பர் என்னும் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் அதற்கான நிதி ஒதுக்கப்படாமல் இருந்துள்ளது. இது பற்றி கேட்டபோது இந்த திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் மீண்டும் பரிசீலனை செய்வது கடினம் எனக் கூறியுள்ளார். இதனால் இதற்கு பதிலாக நெய்மர் என்னும் தேசிய மருத்துவ சாதன ஆராய்ச்சி நிறுவனத்தை மதுரைக்கு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எய்ம்ஸ் நிறுவனமும் மதுரைக்கு வர இருப்பதால் ஹெச் சி எல் ஹனிவெல் போன்ற மருத்துவ பொறியியல் நிறுவனங்கள் மதுரையில் ஆய்வுகளை மேற்கொள்கின்ற நிலையில் நைமர் மதுரையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அமைச்சருடன் பேசிய சந்திப்பின்போது தமிழக நிதித்துறை செயலர் என். முருகானந்தம் மதிய நிதித்துறை செயலர் டிவி சோமநாதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Categories

Tech |