மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மீனாட்சிபுரத்தை உள்ளடக்கியுள்ள 193.215 ஹெக்டேர் பகுதி ஆனது பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக கடந்த 2020 டிசம்பரில் தமிழக அரசு அறிவித்த நிலையில் உயிர்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியை தற்போது தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே வரலாற்று பாரம்பரியம் உள்ளதாகவும், அரிய வகை பறவைகள், பூச்சிகள், விலங்கினங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கு உள்ள பழமையான பாறைகள் குடைவரை சிவன் கோயில் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.