தமிழகத்தில் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீரென்று மின் தடை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கோவை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். கரூர், புலியூர், காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட தாகவும், பல இடங்களில் ஒரு மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இது போன்று அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். வெயில் அதிக அளவில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதில் மின்வெட்டு ஏற்பட்டால் மேலும் சிரமமாக உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.